12474 – தமிழ் நயம் 2006: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

எஸ். விஸ்மன், எம்.மோதீஸ், எஸ்.வசந்தன், பீ.பிரதீபன் (இதழாசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு: நியூ யூ.கே. பிரின்டர்ஸ்).

(276) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் 2006ஆம் ஆண்டு நடத்திய கலைவிழாவின்போது வழங்கப்பட்ட சிறப்பு மலர். வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. இம்மலர் வெளியீட்டுக் காலப் பகுதியில் கல்லூ ரியின் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியராக திரு. ஆர்.ராஜசூரியரும், மன்றத் தலைவராக பி.அரவிந்தன் அவர்களும், இணைச் செயலாளர்களாக என். ஹிஸாம் முஹம்மத், எம்.எஸ்.ஏ.எம். சினாஸ் அலீம் ஆகியோரும் பணி யாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41075.)

ஏனைய பதிவுகள்

12006 – ஒரு நூலின் மகத்துவம்: தரமான நூலொன்றை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகள்.

புஷ்பகுமார விதானகே (சிங்கள மூலம்), லறீனா அப்துல் ஹக் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,