12479 – தமிழ்மொழித் தினம் 1994.

ச.அருளானந்தம் (இதழாசிரியர்). திருக்கோணமலை: கல்வித் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).

xx, 156 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

1994 ஆடித் திங்கள் 6ஆம், 7ஆம் திகதிகளில் கல்முனையில் நடத்தப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண அரசின் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழித் தின விழாவின்போது 7.7.1994 அன்று வெளியிடப்பட்டது. இதிலுள்ள 48 படைப்பாக்கங் களும் தமிழ்மொழியின் சிறப்பும் அதன் விரிவாக்கமும், தமிழ் மொழியும் தற்காலமும், எதிர்காலத் தமிழ் வாழுமா வீழுமா?, வலிவுறத் தமிழினி ஆளும், தமிழுக்கு நாம் செய்யக்கூடிய சேவை, காலத்தை வென்று நிற்கும் தமிழ், தமிழ்மொழி கற்பித்தலில் ஆரம்பப் பாடசாலையின் பங்கு, கற்றலும் நிற்றலும், நந்தமிழ், பைந்தமிழ் நவின்ற செந்நாப்புலவன், தமிழிற் குழந்தை இலக்கியம், வெல்லட்டும், மனச்சாட்சி, பைந்தமிழ் கற்பதால் ஏற்படும் பயன், பௌர்ணமி, ஓசை ஒலியெலாம் ஆனாய், கத்துங் குயிலோசை, கல் முதல் மின்னல் வரை, குடையை விரியாதே, இலக்கியக் காதல், சுதந்திரத் தமிழ், மலையக கலை இலக்கியமும் சமூக மாற்றமும், மொனாலிசாவுக்கு முறுவல் சொல்லித் தந்தவளே, ஒத்திகையும் ஒப்பனையும், வாழும் வழி, ஓடி விளையாடு பாப்பா, அற்புதத் தொண்டு, மொழி வளர்ச்சியில் நூலகங்களின் பங்கு, கட்டுச்சோறு, சிறுவர் சுவைக்கும் கதைகள், பாரதியின் காதற்சுவை மிகு கவிதைகள், புதுயுகம் படைப்போம், தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம், அந்தப் பூனையைப் போல எங்களால் அமைதியாகத் தூங்க முடியுமா? நமது இசை, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், தன்னிகரில்லாத் தமிழ், மட்டக்களப்பு மாநிலத்தின் கவிவளம் மிக்க வசந்தன்-கலைநலம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்- ஒரு நோக்கு, தமிழ் நாவலிலக்கிய முன்னோடி முகம்மது காசிம் சித்திலெவ்வை, சிறுவர்க்கான நாடகங்களும் ஆசிரியர்களும், இனிய தமிழ் இலக்கியத்தில் இயற்கை வர்ணனைப் பாடல்கள், இலக்கியத்திற் சிலேடை-ஒரு நோக்கு, பாடசாலையில் சாதனையை உயர்த்தக்கூடிய வழிகள், இலக்கியமும் திறனாய்வும் மாணவர்களும், இலக்கியக் கல்வியின் நோக்கங்களும் கற்பித்தல் அணுகுமுறைகளும், திருக்கோணமலை மாவட்ட நாடகச் சிந்தனைகள், இன்பத் தமிழும் இஸ்லாமிய இலக்கியங்களும் ஆகிய தலைப்புகளில் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19180)

ஏனைய பதிவுகள்