12483 – தமிழருவி: ஐந்தாவது இதழ் 1974-1975.

வீரகத்தி கதிரமலை (மலர் ஆசிரியர்). கொழும்பு 10: தமிழ் மன்றம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி, 1வது பதிப்பு, 1975. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xvi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

கொழும்பு, மருதானையில் இயங்கும் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றம் ஆண்டுதோறும் வெளியிடும் தமிழருவி ஆண்டிதழின் ஐந்தாவதாண்டு இதழ். இவ்விதழில் அடித்தளத்தின் ஆழம் நாம் அடைய முயலும் இலட்சியம் (செயலாளர்), ஆளத்தான் போகிறோம்-வாழத்தான் போகின்றோம் (சரஸ்வதி சிவஞானம்), கடைச்சங்க காலமுந் தமிழரின் சமூக பொருளாதார வாழ்க்கையும் (பொ.சங்கரப்பிள்ளை), சோஷலிசமும் சட்டமும் (என்.சத்தியேந்திரா), விஞ்ஞான கைகணி (தா.சோமசேகரம்), நீ ஓர் அசல் கோமாளி (வீரகத்தி கதிரமலை), மறைந்தும் மறையாதவர் (ஈழவேந்தன்), இலங்கைத் தமிழரின் கட்டிடக்கலை (வி.எஸ்.துரைராஜா), பிரதேச அபிவிருத்தி மன்றத்தின் தோற்றமும் அதன் நோக்கங்களும் (செ.ஆறுமுகராஜா), தம்பியே தட்டிக்கேளுன்னை (கதிர் பொன்னுத்துரை), தனக்கென்றொரு பாதை (ஜி.என்.எஸ்), கோழியும் ஆமையும் (எம்.எச்.ஏ.சமது), நன்மைக்கு நன்மை செய்வது (சந்திரன்), ஆக்க இலக்கியத்தின் அவசியம் (வ.இராசையா), நாம் நாடகம் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு இருவர அளித்த பதில்கள் (சு.வித்தியானந்தன், கார்த்திகேசு சிவத்தம்பி), இலங்கை அறிவு இயக்கத்தை சந்திக்கிறோம் (பேட்டி), ஏயடரயவழைn (எம்.நடராஜா), உலகம் உய்ய உயிர்த்தெழுந்தார் (டி.ஆர்.அம்பலவாணர்), நிறைந்த நாகரிகம் (கந்தையா சிவசுப்பிரமணியம்) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4427).

ஏனைய பதிவுகள்

Darmowy Konstruktor Stron internetowych

Content Przyciągaj Bezpłatny Gest Do Swojego własnego Sklepiku W Wymianie Ulotek: keks Plage Play za prawdziwe pieniądze Jak Przypiąć Strony internetowe Do odwiedzenia Paska Zadań