கலைவிழாச் சிறப்பிதழ். அ.நந்தகுமாரன், இ.இராஜராஜன், ம.சண்முகபிரகாஷ் (இதழாசிரியர்கள்). மொரட்டுவை: தமிழ் இலக்கிய மன்றம், மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1998. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).
(120) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
மொரட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழ் விழா கலை நிகழ்வு 1998இல்அன்று நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இதழாசிரியர் குழுவில் அ.நந்தகுமாரன், இ.இராஜராஜன், ம.சண்முகபிரகாஷ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஆசியுரைகள், அறிக்கைகள் விளம்பரங்களுக் கிடையே, குழந்தை தான், புலமையாளன் எனப்படுபவன், இனம்புரியாத வெறுப்பில், உழைப்பாளி வெற்றி உயர்வு, எங்கு நீர் சென்றீர், உறவைத் தேடி, பிரச்சினைகளும் அரசின் வழிமுறைகளும், மெல்லெனப் பெய் மழையே ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39956).