12488 – தென்னவள்: மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாச் சிறப்பு மலர் 2014.

தி.அபராஜிதன் (இதழாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவைகள், மீசாலை).

xix, 44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

சாவகச்சேரி, தென்மராட்சிக் கல்வி வலயம் 2014 மார்கழியில் ஒழுங்குசெய்த பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான கலைவிழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசிச் செய்திகள் வாழ்த்துரைகளுடன் விழா பற்றிய விழா இணைப்பாளர் கோபாலபிள்ளை கயிலாசநாதனின் அறிக்கையும், மண் மகிழ மனம் குளிர மெருகூட்டிய மார்கழித் திங்கள் முழுநிலா (தி.அபராஜிதன்), தென்மராட்சியின் பண்பாட்டைப் பிரதிபலித்த மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாவின் ஊர்திப் பவனி- ஒரு பார்வை (க.க.ஈஸ்வரன்), தமிழர் மரபில் இன்னியம்: ஒரு கண்ணோட்டம் (க.குணரத்தினம்), இன்னியத்தில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வாத்தியங்கள் (திருமதி புனிதகுமாரி ஈழநேசன்), நாட்டியக் கலையில் நவரசம் (வி.சுனில் ஆரியரத்ன), காலந்தோறும் இசை (கு.ஜோதிரட்ணராஜா), பின்னல் கோலாட்டம்: ஓர் அறிமுகம் (தர்சினி பீதாம்பரன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58278).

ஏனைய பதிவுகள்

14707 நூறு குறளும் நூறு கதையும்.

ஆ.வடிவேலு. பருத்தித்துறை: ஆ.வடிவேலு, வடிவகம், தும்பளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்ரேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). xiv, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN:

14525 மழலை அமுதம் (கவிதைத் துளிகள்).

பீ.பீ.அந்தோனிப்பிள்ளை. மன்னார்: பீ.பீ. அந்தோனிப்பிள்ளை, ஆத்திக்குழி, முருங்கன், 1வது பதிப்பு, மார்கழி 2011. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). vii, 51 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு:

12725 – செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்.

பத்மா இளங்கோவன். யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). (2), 47 பக்கம்,

14177 ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமித்தி: வெள்ளிவிழா மலர் 1995.

மலர்க் குழு. கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா குடீர், 59, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு: செவ்வந்தி அச்சகம்). (72) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20

14435 உரைநடைக்கோவை: ஆறுமுக நாவலர் தொடக்கம் சிவராமன் வரை.

சு.வேலுப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, புரட்டாதி 1998, 1வது பதிப்பு, புரட்டாதி 1996. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா வெளியீடு, F.L. 1/14, டயஸ்