12488 – தென்னவள்: மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாச் சிறப்பு மலர் 2014.

தி.அபராஜிதன் (இதழாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவைகள், மீசாலை).

xix, 44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

சாவகச்சேரி, தென்மராட்சிக் கல்வி வலயம் 2014 மார்கழியில் ஒழுங்குசெய்த பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான கலைவிழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசிச் செய்திகள் வாழ்த்துரைகளுடன் விழா பற்றிய விழா இணைப்பாளர் கோபாலபிள்ளை கயிலாசநாதனின் அறிக்கையும், மண் மகிழ மனம் குளிர மெருகூட்டிய மார்கழித் திங்கள் முழுநிலா (தி.அபராஜிதன்), தென்மராட்சியின் பண்பாட்டைப் பிரதிபலித்த மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாவின் ஊர்திப் பவனி- ஒரு பார்வை (க.க.ஈஸ்வரன்), தமிழர் மரபில் இன்னியம்: ஒரு கண்ணோட்டம் (க.குணரத்தினம்), இன்னியத்தில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வாத்தியங்கள் (திருமதி புனிதகுமாரி ஈழநேசன்), நாட்டியக் கலையில் நவரசம் (வி.சுனில் ஆரியரத்ன), காலந்தோறும் இசை (கு.ஜோதிரட்ணராஜா), பின்னல் கோலாட்டம்: ஓர் அறிமுகம் (தர்சினி பீதாம்பரன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58278).

ஏனைய பதிவுகள்

14638 புலமையும் வறுமையும்.

குலசேகரம் கமலேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: கு.கமலேஸ்வரன், துர்க்காபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). 150+84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. தெல்லிப்பழை துர்க்கையின்

14143 தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி சிறப்புமலர்-2002.

பொன்.புவனேந்திரன் (மலராசிரியர்). கனடா L5 B4 B4: செல்வச்சந்நிதி முருகன் ஆலய மாமணி நிர்மாண சபை, 2584இசுரபடில சுழயனஇ ழே.603இ ஆளைளளைளயரபயஇ ழுவெயசழைஇ 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்,

14912 இரண்டெழுத்தில் இயங்கிவந்த இணையற்ற செயல்வீரன்.

மலர்க் குழு. கொழும்பு 13: எம்.சி.சுப்பிரமணியம் நினைவுக் குழு, 161-1/1, ஜிந்துப்பிட்டி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்த மேடு). 80 பக்கம், விலை: