தர்மசேன ரசாபான (மூலம்), தம்பு கனகரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு: நிசங்க ஜயவர்த்தன, வெளியீட்டுப் பிரிவு, கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1983. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டத்தாபனம்).
14 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் காலகட்டத்தில் 18.01.1980 அன்று சம்பிரதாயபூர்வமாக அரச பாடசாலைகளுக்கு இலவச பாட நூல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தின் மூன்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் குளியாப்பிட்டி நகரில் நக்காவத்தை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு பொது வைபவம் நடத்தப்பட்டது. அன்றையதினம் இப் பிரசுரம் விநியொகிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4049/10276).