மா.பாலசிங்கம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2008. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், இல.43, திருஞானசம்பந்தர் வீதி).
xxvi, (6), 144 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
திருக்கோணமலை, ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 1923இல் உருவாக்கப்பட்டது. 2008இல் 85ஆவது அகவையை அடையும் இப்பாடசாலையின் சிறப்புமலர் 11.10.2008இல் நடைபெற்ற 85ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துடனும் பரிசளிப்பு விழாவையொட்டியும் வெளியிடப்பட்டது. மேற்படி பாடசாலையின் வருடாந்த வெளியீடான ‘மகுடம்” ஆண்டிதழின் இரண்டாவது இதழே சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. அதிபர் அறிக்கை, கம்பன் காட்டும் ஆள்பவனுக்கு உரிய கடப்பாடுகள், கவிதானுபவம், முருக வழிபாடும் தத்துவமும், சித்தாந்த வாழ்வியல் தத்துவம், வினையாற்றல் குறைந்த ஆசிரியர்களை முகாமைத்துவம் செய்தல், தரமான கல்விக்கு தரமான ஆசிரியர்கள், இலக்கியங்கள் மனித மேம்பாட்டுக்காகவே படைக்கப்படல் வேண்டும், பண்புசார் முகாமைத்துவச் செயற்பாடுகள், இலங்கையில் உணவு வறுமையின் போக்கு, தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையும் எமது பாடசாலையும், இங்கே இப்போதே முக்தி, இறைவனை வழிபடு, எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய கல்லூரி அதிபர், மாணவர்கள் கல்வியில் முன்னேறவேண்டுமா?, இலக்கியங்களும் மனித விழுமியங்களும், நானும் உங்களில் ஒருவன், ஊடகங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், ஊடகங்களும் நாமும், அன்பினால் அகிலத்தை வெல்வோம், மகுடம் சூடும் எனது கல்லூரிக்கு, வங்கிச் சேவையின் உபயோகங்கள், இன்றைய உலகில் போதைப் பொருட் பாவனை, இது இவ்வரங்கம் அறிந்த இரகசியம், அன்பு, முதியோரை மதித்தல் வேண்டும், நாங்கள் மனிதர்கள், மனிதாபிமானத்திற்கான தகவல் பரிமாற்றம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48872).