12495 – மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி: நாற்பதாண்டு நிறைவுச் சிறப்பு மலர் 1959-1999.

எஸ்.யூ. சந்திரகுமாரன் (மலராசிரியர்). மன்னார்: சித்தி விநாயகர் இந்தக் கல்லூரி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

172 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

சைவப் பெருந்தகை குமரையா முத்துக்குமாரு அவர்களால் வழங்கப்பட்ட காணியில் உருவான சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி தான் கடந்துவந்த பயணப் பாதையினை வரலாற்றாவணமாக்கும் நோக்கில் இந்நாற்பதாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின்போது இம்மலரை வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18525).

ஏனைய பதிவுகள்