12496 – முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு, சிங்கப்பூர் 1992.

இரா.மதிவாணன் (மலர்க்குழு சார்பாக). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 1992. (சென்னை: சுனிதா அச்சகம்).

(4), 280 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூரில் 15-18 ஜுன் 1992 இல் நடைபெற்ற வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிஷியஸ், பிரிட்டன், தென்னாபிரிக்கா முதலான நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள், பாவலர்கள், கல்வியியலாளர்கள் எனப் பலரும் தத்தம் படைப் பாக்கங்களை இம்மலருக்கு வழங்கியிருக்கிறார்கள். இலங்கையிலிருந்து ‘பல்வேறு பண்பாட்டுச் சூழலில் பைந்தமிழ் பயிற்றுவிப்போர் பங்கு” (வை.கா.சிவப்பிரகாசம்), ‘பேச்சுத் தமிழில் ஆங்கிலத்தின் தாக்கம்“ (அமெரிக்காவிலிருந்து முனைவர் பார்வதி கந்தசாமி) ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இருவகைப்பட்ட இலக்கணக் கல்வி, இலக்கணம் கற்பிக்கும் நெறிமுறை, இலக்கியம் கற்பித்தல், வுநயஉhiபெ ஊடயளiஉயட வுயஅடை Pழநவசலஇ கருத்துப் பரிமாற்ற அணுகுமுறை வாயிலாகப் பேச்சுத்தமிழை மேம்படுத்துதல், தாய்மொழிப் பாடத்திட்டம், மொழி கற்பித்தலில் விளையாட்டு முறையும் மொழி விளையாட்டுகளும், மொழிபெயர் தேயத்தினருக்குத் தமிழ் கற்பித்தலில் சிக்கல்களும் தீர்வுகளும், தமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள், வுயஅடை வுநயஉhiபெ யனெ டநயசniபெ-வுழனயல யனெ வுழஅழசசழற: யு ளுழரவா யுகசiஉயn Pநசளிநஉவiஎந, பாலர் பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத் திறனை வளர்த்தல், மொரிஷியசில் தமிழ் கற்றல் – கற்பித்தல், தமிழ் கற்றலில் மாணவர்களுக்கு எதிர்ப்படும் இடர்ப்பாடுகள், இலக்கணம் புதியதும் பழையதும், அயல்நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் பயிற்றுவிப்பதில் எதிர்நோக்கவேண்டிய இடர்ப்பாடுகள், இலக்கணம், இலக்கணத்திற்காகவா? மொழிக்காகவா?, பகிர்ந்து படித்தல் பற்றி பள்ளி சார்ந்த ஓர் ஆய்வு, செய்முறை உத்தியைக் கொண்டு கட்டுரை கற்பித்தல், உயர்நிலை நான்கில் பயிலும் மாணவர்களின் கருத்தறிதல் திறனை மேம்படுத்துதல்-ஓர் ஆய்வு, மாணவர்கள் பேச்சாற்றலை வளர்க்க ஒலிநாடாக்களின் பங்கு, தமிழ் கற்பித்தலில் இனிமையும் எளிமையும், மாணவரின் மொழித்திறன் வளர்ச்சியும் மதிப்பீட்டு முறைகளும், தமிழ் கற்றலை மேம்படுத்துவதில் பயிற்று கருவிகளின் பங்கு, தமிழ்மொழிப் பாடத்திட்டம்- புதிய பார்வை, சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வியில் அரசாங்கத் தேர்வு முறை, சிங்கப்பூரில் தமிழாசிரியர் பயிற்சி, சிங்கப்பூரில் தமிழ், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடந்துவந்த பாதை ஆகிய தலைப்புகளில் ஆய்வரங்கக் கட்டுரைகளும் உரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23306).

ஏனைய பதிவுகள்

Redeem Money back Benefits

Articles Do you know the benefits associated with online bank card payments? Bank that have a no-commission bank account Common questions relating to credit card