12503 – விபுலவாணி: வாணிவிழாச் சிறப்பு மலர் 2005.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், கொழும்பு விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு: கிரிப்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்).

152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

பாடசாலையில் நவராத்திரி பூஜைக் காலங்களில் மாணவர்களால் தயாரிக்கப்பட்டு கன்னிப் பிரசுரமாக ஒக்டோபர் 2001 முதல் வெளியிடப்பட்டுவரும் சிறப்பு மலரின் 2005ஆம் ஆண்டுக்கான இதழ் இது. அரும்பு என்ற பிரிவில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களும், மலர் என்ற பிரிவில் இடைநிலை, உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆக்கங்களும், தாரகை என்ற பிரிவில் மேல்மாகாண மொழித்தினப் போட்டியில் பரிசுபெற்ற இப் பாடசாலை மாணவர்களின் படைப்புக்களும், தேட்டம் என்ற பிரிவில் சைவசமய உணர்வை வளர்க்கும் உத்திமுறைகள் (கு.ஸ்ரீகந்தராஜா), ஓர் ஆசிரியர் உள்ளத்திலிருந்து (சிவகுமாரி புவனராசா), இலங்கை வளம் (சோமசுந்தரம் முரளி), சிவசக்தி விநாயகன் துணை (சோமசுந்தரம் முரளி), சைவசமய வழிபாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஆசௌசங்களும் நீக்கத்துக்கான கால எல்லைகளும் (ம.சிவசுப்பிரமணியம்) ஆகிய ஆசிரியர் படைப்பாக்கங்களும், புது வரவு, ஆசிரியர் தினம்-2004 ஆகிய அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36891).

ஏனைய பதிவுகள்

Top ten Online casinos

Posts Greatest Set of The brand new ten Finest Web based casinos Within the India To own How we Find a very good Real cash