முருகேசு கௌரிகாந்தன் , பாலசிங்கம் பாலகணேசன் (மலராசிரியர்கள்). கோப்பாய்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xii, 134 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
வாழ்த்துச் செய்திகளுடன் தொடங்கும் இம்மலரில் இலங்கைத் தமிழர் வரலாறு, பண்பாட்டை அர்த்தப்படுத்துவோம், அரங்கத்தறிஞர் இருவர், ஈழவேந்தன் வீரசங்கிலியும் வாரலாற்றாசிரியர்களும்: ஒரு பார்வை, முத்தமிழ்- மூலக் கருத்துப் பற்றியதொரு குறிப்பு, சங்கிலி மன்னன், மாமன்னன் வீர சங்கிலியன் மீதான ஆய்வுத் தேடலுக்கு, யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலியா? சங்கிலி குமாரனா?, ஆரியச் சக்கரவர்த்திகள், வுயஅடை-ர்iனெர முiபெ ளுயமெடைi ழக துயககயெ in புழய, கோப்பாய் பழைய கோட்டையின் கோலம், தமிழக அரசரும் தேவியரும் நீராடி மகிழ்ந்த ஜமுனாரி, 15ஆம் நூற்றாண்டில் தமிழ் மன்னர், வீர சங்கிலியனின் அரும்பணிகள், வீரசங்கிலி மன்னன், வெற்றியாளனாய் வீரம் நிகழ்த்தினாய், சங்கிலி மாமன்னனின் வரலாற்றுப் பாடம், நம் வீர மன்னன் சங்கிலியன், நம் வீர சங்கிலியன், வீரா நம் சங்கிலியனே, வீர சங்கிலி செகராசசேகரன், சங்கிலி நாடகம் ஆகிய படைப்பாக்கங்களும் இறுதிப் பகுதியில் முத்தமிழ் விழாவினபிரதம விருந்தினர்கள், முத்தமிழ் விழாச் சிறப்பு விருந்தினர்கள் (செல்வி சவுந்தராம்பிகை கணபதிப்பிள்ளை, திரு. தம்பு சிவசுப்பிரமணியம்), முத்தமிழ் விழாவில் கௌரவிக்கப்பெறுபவர் (முனைவர் துரை மனோகரன், சி.சிவலிங்கராஜா) ஆகியவையுமாக மொத்தம் 27 விடயதானங்களை இம்மலர் தன்னகத்தே கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62119).