பாலர் கல்விக் கழகம். யாழ்ப்பாணம்: இ.இரத்தினகோபால், செயலாளர், பாலர் கல்விக்கழகம், 49/5 யாழ் வீதி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: சுவர்ணம் பப்ளிசிட்டீஸ்,
125ஏ, புகையிரத நிலைய வீதி). (14), 170 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 17×12 சமீ.
இந்நூல் பாலர் கல்வி தொடர்பான பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பாகும். விஞ்ஞானமுறை ஆய்வாளர்களின் பாலர் கல்விக் கொள்கைகளும் சித்தாந்தமும், பாடவிதான வழிகாட்டுதல், பாலர்களின் உடல்நலம், புலன்- பயிற்சியும் நுண்மதிப் புலப்பாடமும், குழந்தைப் பாடசாலையில் எண்ணை அறிமுகம் செய்தல், குழந்தைகளுக்கான மொழி அபிவிருத்தியை ஏற்படுத்துதல், பாலர் சித்திரமும் செயற்பாட்டு முறைகளும், பாலர் கல்வியும் இசையும் அசைவும், விஞ்ஞான அனுபவங்கள், குழந்தைகளின் உளவியற் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் பங்கு, முன்பள்ளிக் கலைத்திட்டத்தை வளமுறச் செய்தல், பாலர் பாடசாலையின் ஆசிரியையும் பெற்றோரும் சமுதாயமும், குழந்தைக் கல்விக் கோட்பாடுகள், குழந்தைக் கல்வியில் பாரம்பரியமும் சூழலும், பாலர் பாடசாலை அமைப்பும் அதன் தளபாட உபகரணங்களும் ஆகிய 15 கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. பின்னிணைப்பு களாக, வளர்ச்சிபெற்ற நாடுகளில் (மேற்கு ஜேர்மனி) பாலர் கல்வி முறை-ஒரு கண்ணோட்டம், வுhந ருளநகரடநௌள ழக குசைளவ யுனை வழ வுநயஉhநசளஇ பாலர் கல்விக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள்-1986 ஆகிய மூன்று ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இது பாலர் கல்விக் கழகத்தின் முதலாவது வெளியீடாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87079).