12509 – பாலர் விளையாட்டுக்கள்.

சபா ஜெயராசா. யாழ்ப்பாணம்: நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டம், யாழ்ப்பாண மாநகரசபை, 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட கூட்டுறவு கவுன்சில், 40/1, நாவலர் வீதி).

24 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 22.5×18 சமீ., ஐளுடீN: 978-955-1997-36-6.

பாலர்களுக்குரிய இருபது விளையாட்டுக்கள், பாலர்களைக் கவரும் முழுப்பக்க வண்ண விளக்கச் சித்திரங்களுடன் இடம்பெற்றுள்ளன. உள்-வெளி விளையாட்டு, புதிர்ப்பொதி விளையாட்டு, மலர் விளையாட்டு, உறுப்பு அறிதல் விளையாட்டு, ஆரை விளையாட்டு, மேசை அலங்கரிப்பு விளையாட்டு, விழா மண்டபம் அறை அலங்கரிப்பு விளையாட்டு, மாமர விளையாட்டு, பெரிது சிறிது விளையாட்டு, கடித உறை விளையாட்டு, அடுக்குப் பெட்டி விளையாட்டு, கொடி விளையாட்டு, நிறைகுட விளையாட்டு, தண்ணீர் விளையாட்டு, விடையோட்டம், கயிற்று விளையாட்டு, சுருள்வலை விளையாட்டு, கருத்து அறிதல் விளையாட்டு, மணமஅறி விளையாட்டு, நிறம் அறி விளையாட்டு ஆகிய இருபது விளையாட்டுக்களே இந்நூலில் இடம்பிடித்துள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறையின் தலைவராக விளங்கும் கலாநிதி சபா ஜெராசா அவர்களினால் ஆக்கப்பெற்ற இந்நூலின் ஆலோசகராக மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஆர். தெய்வேந்திரமும், பதிப்பாசிரியராக நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்ட பிராந்தியத் திட்ட அலுவலர் ஏ.ஜேசுரெட்ணம் அவர்களும் இயங்கியுள்ளனர். இதே தலைப்பில் சபா.ஜெயராசா அவர்களின் மற்றுமொரு நூல் 24 பக்கங்களுடன் பத்து விளையாட்டுகளுடன் குமரன் புத்தக இல்லத்தின் மூலம் 2012இல் வெளியிடப்பட்டது. பதிவு இலக்கம் 8469

ஏனைய பதிவுகள்