பாடத்திட்டக் குழு. கொழும்பு 2:
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9வது மாடி,21, வாக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு2: ராஜன்அச்சகம், 31, கியூ ஒழுங்கை).
28 பக்கம், விலை: இலவசம், அளவு: 21×12.5 சமீ.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில்
நிறுவப்பட்டு வரும் சைவ சமய பாடசாலைகளான அறநெறிப் பாடசாலைகளுக்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டம் இது. சமயக் கல்வி மூலம் அன்பு, அஹிம்சை, நேர்மை, பொறுமை, இன்சொல், சேவை, தியாகம், கூட்டுறவு ஆகிய உயர் பண்புகளை வளர்க்கும் நோக்குடன் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலர் பிரிவு (2ஆம், 3ஆம் ஆண்டுகள்), கீழ்ப்பிரிவு (4ஆம், 5ஆம் 6ஆம் ஆண்டுகள்), மத்திய பிரிவு (7ஆம், 8ஆம், 9ஆம் ஆண்டுகள்), மேற்பிரிவு (10ஆம், 11ஆம் ஆண்டுகள்) என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டு இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் வீதம் 52 வாரங்களும் மொத்தம் 156 மணித்தியாலங்கள் மாணவர்கள் இந்த அறநெறிப் பாடசாலைகளில் செலவிட எதிர்பார்க்கப்படுகின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க
நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13155).