12511 – கல்வியும் கலைத்திட்டமும்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அபிராமி பதிப்பகம், 17, ஜும்மா பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1984. (யாழ்ப்பாணம்: அபிராமி பதிப்பகம்).

63 பக்கம், விலை: ரூபா 12.00, அளவு: 17×12 சமீ.

இந்நூல் கல்வியும் கலைத்திட்டமும், கலைத்திட்ட அபிவிருத்தி, கலைத்திட்ட ஒழுங்கமைப்பு, கலைத்திட்டத்தைத் திட்டமிடல், கலைத்திட்ட நோக்கங்கள், கலைத்திட்டத்தை வளம்படுத்தும் கல்வித் தரிசனங்கள், உளவியற் செல்வாக்கு நிலைகள், எதிர்மறைத் தாக்க விசைகள், கலைத்திட்டச் செயற்பாடுகளின் இருமைத் தன்மை, பாடசாலை என்ற காட்டுரு, கற்பித்தல் நுணுக்கங்கள், ஆசிரியத்துவம், பரீட்சைகள், பாடநூல்கள், பாடசாலை நூல்நிலையங்கள், வானொலி, தொலைக்காட்சி, கலைத்திட்டமும் மொழியும், தொடர்புக் கோலங்கள் ஆகிய அத்தியாயங்களின் வழியாக இந்நூல் கல்வியும் கலைத்திட்டமும் பற்றிய விளக்கமளிக்கின்றது. மேற்குலகில் கலைத்திட்டத்திலே காலத்துக்குக் காலம் புதுமைகள் புகுத்தப்பட்ட வேளைகளில் அவற்றுக்கு ஈடுகொடுக்கக்கூடியவகையில் இலங்கையில் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள் வழங்கும் திட்டங்கள் அமுல்படுத்தப்படலாயிற்று. அத்தகைய பயிற்சிநெறிகளில் பயன்படுத்த இந் நூல் பயனுள்ளதாகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009646. யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் சேர்க்கை இலக்கம் 122973).

ஏனைய பதிவுகள்

Avis sur les casinos en ligne

3 mines game Mines game download real money Avis sur les casinos en ligne This string is then converted into a SHA512 hash, an advanced