தரம் 2. ஆசிரியர் குழு. கொழும்பு: ஆரம்பக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை).
ix, 213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டு, தேசிய கல்வி நிறுவகத்தின் ஆரம்பக் கல்வித் துறையினரால் புதிய கல்விச் சீர்திருத்தத்தை ஆதாரமாகக் கொண்டு தரம் 2 இற்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டமும் ஆசிரியர் கைநூலும் இதுவாகும். ஆசிரியர்களுக்குத் தேவையான வழிகாட்டலும், பாட உள்ளடக்கம் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39223).