வங்கிகளும் வங்கித் தொழிலும். சு.இராஜகிருஷ்ணர் இரகுநாதன். கண்டி: பவளரத்ன பப்ளிக்கேஷன்ஸ், 396/12டீ, பேராதனை வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ், 712, பு;மெண்டால் வீதி).
(8), 71 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 22xஒ14 சமீ., ISBN: 955-8389-00-5.
இந்நூல் வங்கித்தொழிலையும் அது தொடர்பான சகல செயற்பாடுகளையும் மிகவும் எளிமையான முறையில் இலகு தமிழில் எடுத்துக் கூறுகின்றது. இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், தேசிய சேமிப்பு வங்கி, அபிவிருத்தி வங்கிகள், கிராமிய வங்கிகள், வியாபார வங்கிகள், நிதிக் கம்பெனிகள், குத்தகைக் கம்பெனிகள், கைமாறத்தக்க சாதனங்கள், காசோலை, மாற்றுண்டியல், வாக்குறுதிச் சீட்டு, பணம், நாணய மாற்று விகிதம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38011).