12520 – வணிகக் கல்வி-பகுதி II: முகாமைத்துவம்.

யு.விஜேந்திரன் (புனைபெயர்: சண்). கொழும்பு: விஜேந்திரன் (சண்), 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(6), 146 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5×15 சமீ.

க.பொ.த. உயர்தரம் புதிய பாடத்திட்டத்தில் பகுதி 2இல் அறிமுகப்படுத்தப்பட்ட 3ஆம், 4ஆம் அலகுகளை உள்ளடக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் பல்கலைக்கழகப் பரீட்சை, வங்கிப் பரீட்சை, தொழில்நுட்பக் கல்லூரிப் பரீட்சை போன்றவற்றிற்கும் ஏற்புடையதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் வணிக முயற்சிகளுக்கும் இடையிலான தொடர்பின் முக்கியத்துவம், முயற்சி யாண்மை, சிறிய நடுத்தர அளவு நிறுவனங்கள், முகாமைத்துவம், மனிதவள முகாமை, நிதிமுகாமை, உற்பத்தி முகாமை, இருப்புக் கட்டுப்பாடு, சந்தைப்படுத்தல் முகாமை, செயற்திட்ட அறிக்கை, விடய ஆய்வு ஆகிய அத்தியாயத் தலைப்பு களின்கீழ் இந்நூல்எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21574).

ஏனைய பதிவுகள்

14009 தமிழர் தகவல் 2000. ஒன்பதாவது ஆண்டு மலர் (மிலேனியம் மலர்).

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்). கனடா: அகிலன் அசோஷியேட்ஸ், P.O.Box 3,Station F,Toronto, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (Canada, Ahilan Associates, Printters and Publishers,Toronto). 158 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: