12526 – ஈழத்து நாட்டார் வழிபாடு.

இரா.வை.கனகரத்தினம். பேராதனை: தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 186 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14.5 சமீ.

இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமரர் இரா.வை.கனகரத்தினம் அவர்கள் ஊடாடிப்பெற்ற அனுபவத்தின் வழியாகவும், திட்டமிட்ட கள ஆய்வு நடவடிக்கைகள் மூலமும் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை வெறுமனே வழிபாட்டு நிகழ்த்துமுறைகளை-சடங்காசாரங்களை விபரணம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சடங்கு, அவற்றின் வழியே உருப்பெறும் நிர்வாக முறைமைகள், பல்வேறு சமூகக் குழுக்களின் இணைவு, அந்த இணைவின் சாத்தியப்பாடுகள், சடங்கின் சமூக முக்கியத்துவம் எனச் சடங்குடன் தொடர்புடைய ஒவ்வொரு கூறும் மிக நுணுக்கமான கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டுள்ளது. ஈழநாட்டிற் கண்ணகி வழிபாடு-ஓர் ஆய்வு, வன்னியிற் கண்ணகி வழிபாடு, ஈழத்து வன்னிமைகளின் சிறுதெய்வ வழிபாடு, ஐயனார் வழிபாடும் ஈழத்து வன்னிமை மக்களும், வன்னிவள நாட்டில் நாச்சிமார் வழிபாடு, நாட்டார் வழக்காற்றில் கொத்தித் தெய்வம், வதனமார் வழிபாடு, நாட்டார் வழக்காற்றில் பெரியதம்பிரான் வழிபாடு, நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியதம்பிரான் வழிபாடு-ஓர் அறிமுகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அமரர் இரா.வை.கனகரத்தினம் அவர்களின் ஞாபகார்த்த மாகத் தொகுக்கப்பெற்ற இந்நூலின் நுலாக்கக் குழுவில் வ.மகேஸ்வரன், சோதிமலர் ரவீந்திரன், ஸ்ரீ பிரசாந்தன், ஆன் யாழினி சதீஸ்வரன், பெ.சரவணகுமார், எம். எம்.ஜெயசீலன், பா.சுமன், எம்.என்.ஜெஸ்மினா, எம்.வை.எப்.ரிஸ்மியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14726 வெட்டிய வேரில் ஒரு முளை: சிறுகதைகள்.

மருதமைந்தன் (இயற்பெயர்: M.S.S. ஹமீட்). காத்தான்குடி-02: M.S.S. ஹமீட், 128/7, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 114 பக்கம், விலை:

14572 இரட்டைக்கரு முட்டைகள்.

இ.சு.முரளிதரன் (மூலம்), கே.எம்.செல்வதாஸ் (தெளிவுரை). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 52 பக்கம், விலை: ரூபா 150.,

14554 ஜீவநதி ஆடி 2011: உளவியல் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 48