12532 – போருக்குப் பின் தென் மோடி நாட்டுக்கூத்து.

பிரான்சிஸ் மிக்கேல்பிள்ளை (புனைபெயர்: தூயமணி). யாழ்ப்பாணம்: இளைஞர் கலைக்கழகம், குருநகர், 1வது பதிப்பு, ஆடி 2006. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.அச்சகம்).

x, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.

அமரர் தூயமணி அவர்கள் படைத்த தென்மோடி நாட்டுக்கூத்து இதுவாகும். தமிழ்நாட்டு வேளிர்குல மரபிலே வந்த முதலாம் புலிகேசி மன்னன் காலத்தைய ஒரு வரலாற்று நிகழ்வினை இந்நாட்டுக்கூத்து கதையாக ஆசிரியர் அமைத்துள்ளார். பாரிசில் வாழும் டேமியன் சூரி, இராசதுரை குமார், குருசுமுத்து பீலிக்ஸ், ஆகியோரின் முயற்சியின் பயனாக அமரர் பிரான்சிஸ் மிக்கேல்பிள்ளை அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள நூல் இது. தாயகத்திலிருந்து கிளமென்ற் மாட்டின் நெல்சன், அவர்களின் துணையுடன் குருநகர் இளைஞர் கழகத்தின் வெளியீடாக இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 183247CC).

ஏனைய பதிவுகள்

15206 நிலமானியம் : ஆசியாவினதும் இலங்கையினதும் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு.

சேனக பண்டாரநாயக்க (மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

11345 சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: மா.சின்னத்தம்பி, இயக்குநர், அபிவிருத்தி நிறுவன வெளியீடு, கொக்குவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி பிரஸ்). (6), 35 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 17×12 சமீ. அமரர்

10549 சாட்சி: கவிதைத் தொகுதி.

சுருதி. நோர்வே: நோர்வே ஈழத்தமிழர் அவை, இணை வெளியீடு, நோர்வே நாடு கடந்த தமிழீழ அரசு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (நோர்வே: ஸ்மார்ட் அச்சகம்). 38 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: