12535 – கிரந்தம் தவிர் தமிழ்பழகு.

வி.இ.குகநாதன் (தொகுப்பாசிரியர்).யாழ்ப்பாணம்:
அறம்செய் அமைப்பு, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).


30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சமூக நலன்புரி அமைப்பான ‘அறம்செய்” அமைப்பினர் 30.4.2017 அன்று
விழிசிட்டி சனசமூக நிலையத்தில் 130 மரக்கன்றுகளை வழங்கிவைத்துத் தமது சமூக சேவையினை ஆரம்பித்தனர். பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை (சதுரங்கப் பலகைகள்)வழங்கியதுடன் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நிதிஉதவி வழங்கியதும் இவ்வமைப்பின் சில பணிகளாகும். அவ்வகையில் தூய தமிழ்மொழிப் பயன்பாட்டை வலியுறுத்துவதில் தமது பங்களிப்பாக இந்நூலை 2018 மே 9இல் வெளியிட்டு வைத்திருக்கின்றார்கள். முன்னைநாள் தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்க முகாமையாளரும், முன்னைநாள் ‘அக்குறோதாபாஸ்” நிறுவன தொழில்முனை வோராகவும் ‘அறம் செய்” அமைப்பின் இயக்குநராகவுமிருந்த அமரர் கனகசபை இலங்கநாதன் அவர்களுக்குக் காணிக்கையாக இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடமொழிச் சொற்களையும் அவற்றுக்கிணையான தமிழ்ச் சொற்களையும் அகரவரிசையில் பட்டியலிட்டுள்ள இந்நூலின் இறுதிப்பகுதியில் எது தமிழ்ப் புத்தாண்டு? முருகன் தமிழ்க் கடவுளா? செம்மொழியான தமிழின் தனிச் சிறப்பு ஆகிய தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் ஆசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்