12537 – இலக்கண விளக்கம்: மூலமும் உரையும்.

திருவாரூர் வைத்தியநாத தேசிகர் (மூலம்), சி.வை.தாமோதரம்பிள்ளை (பதிப்பாசிரியர்), மதுரை ஜில்லா: திருமலை போடய காமராசய பாண்டிய நாயக்கர், போடிநாயக்கனூர் ஜமீந்தார், 1வது பதிப்பு, புரட்டாதி, 1889. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை).

20+851+3 பக்கம், விலை: இந்திய ரூபா 5.00, அளவு: 20.5×12 சமீ.

சி. வை. தாமோதரம்பிள்ளை (12 செப்டம்பர் 1832 – 1 ஜனவரி 1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி. இவர் மூலப் பிரதிரூபங்களைப் பரிசோதித்து வெளியிட்ட முக்கியமான இலக்கண நூல் இதுவாகும். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கணப் பெரும்புலவரான திருவாரூர் வைத்தியநாத தேசிகர் தாமே உரையும் இயற்றி அமைத்த ‘குட்டித் தொல்காப்பியம்” எனப்படும் இலக்கண விளக்கம் பொருட்படலப் பாட்டியலோடு நிறைவுறுகிறது. இந்நூலின் பாட்டியலை உரையுடன் இயற்றியவர் வைத்தியநாத தேசிகருடைய இளைய மகனான தியாகராச தேசிகர் என்னும் செய்தியும் அறியக் கிடக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14617).

ஏனைய பதிவுகள்