12540 – மஞ்சுகாசினியம்-இயங்கு தமிழியல் :

க.சச்சிதானந்தன். தெல்லிப்பழை: க. சச்சிதானந்தன், வானியல் வல்லுநர், மாவிட்டபுரம், 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: நவயோக அச்சகம்).

xv, 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

மஞ்சு என்ற தனது மகளின் நினைவாக இந்த இலக்கண நூலுக்கு ஆசிரியரால் பெயரிடப்பட்டது. மொழியியல், தொல்காப்பிய அடிப்படையில் இன்றைய வாழ்க்கையையும் இலக்கண வரம்புக்குள் இந்நூல் அடக்குகின்றது. புதிய கோணத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல் இதுவாகும். பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (10.10.1921 – 21.03.2008) காங்கேசன்துறையில் பிறந்தவர். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938- 1940) ஆகிய பாடசாலைகளில் ஆரம்ப, இடைநிலை, உயர் கல்வி கற்றார். தந்தையாரிடம் வானியலும் சோதிடம் கற்ற இவர், சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக் குருக்களிடமும் சமஸ்கிருதக் கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் உளவியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடைய இவர், சுவாமி விபுலாநந்தரின் படியெடுக்கும் மாணாக்கராகச் சில காலம் சேவையாற்றினார். அதனால் இவருக்கு ஆய்வுத்துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ‘தமிழர் யாழியல்” என்ற இவரது நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதைப் பெற்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் காலகட்டத்தினை விபரிக்கும் “யாழ்ப்பாணக் காவியம்” என்ற நூல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, வடகிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது ஆகியவற்றைப் பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29107).

ஏனைய பதிவுகள்

1xbet: лучник официального веб-сайта 1хбет праздник

Content 1хбет букмекерская официальный | Альтернативный журнал 1xBet Преимущества использования исправного зеркала ремиз бонусы а еще операции Фиксация на сайте Использование бесперебойного зеркала 1xBet –