12544 – கட்டுரை மணிகள்.

S.F.L.மொஹிடீன் ரஜா (புனைபெயர்: கதைவாணன்). கொழும்பு 12: ஆதவன் பதிப்பகம், 30/3, டாம் வீதி, 5ஆம் (திருத்திய) பதிப்பு, ஜனவரி 2003, 1வது பதிப்பு, ஜனவரி 1997, 2வது பதிப்பு, ஜுன் 1999, 3வது பதிப்பு, டிசம்பர் 2001, 4வது பதிப்பு, ஜுன் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).

132 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5/15 சமீ.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் கேட்கப்படும் கட்டுரை எழுதுதலுக்கான பயிற்சி நூல் இதுவாகும். 300 சொற்களில் எழுதவேண்டிய உரைப் பகுதிகளான சுயசரிதை, கற்பனைக் கட்டுரை, விளக்கக் கட்டுரை, வருணனைக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை, நகைச்சுவைக் கட்டுரை, விவரணம், சிறுகதை, உரையாடல், மேடைப் பேச்சு ஆகியனவும், 100 சொற்களில் எழுதவேண்டிய கடிதம், அறிக்கை, விளக்கம், துண்டுப் பிரசுரம், விளம்பரம் ஆகிய பகுதிகளும் இங்கு மாதிரிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29835).

ஏனைய பதிவுகள்