12544 – கட்டுரை மணிகள்.

S.F.L.மொஹிடீன் ரஜா (புனைபெயர்: கதைவாணன்). கொழும்பு 12: ஆதவன் பதிப்பகம், 30/3, டாம் வீதி, 5ஆம் (திருத்திய) பதிப்பு, ஜனவரி 2003, 1வது பதிப்பு, ஜனவரி 1997, 2வது பதிப்பு, ஜுன் 1999, 3வது பதிப்பு, டிசம்பர் 2001, 4வது பதிப்பு, ஜுன் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).

132 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5/15 சமீ.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் கேட்கப்படும் கட்டுரை எழுதுதலுக்கான பயிற்சி நூல் இதுவாகும். 300 சொற்களில் எழுதவேண்டிய உரைப் பகுதிகளான சுயசரிதை, கற்பனைக் கட்டுரை, விளக்கக் கட்டுரை, வருணனைக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை, நகைச்சுவைக் கட்டுரை, விவரணம், சிறுகதை, உரையாடல், மேடைப் பேச்சு ஆகியனவும், 100 சொற்களில் எழுதவேண்டிய கடிதம், அறிக்கை, விளக்கம், துண்டுப் பிரசுரம், விளம்பரம் ஆகிய பகுதிகளும் இங்கு மாதிரிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29835).

ஏனைய பதிவுகள்

12217 – நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை: இதழ் 16 (2014-2015).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 126

9119 இறை உண்மை (இறையியல் கட்டுரைகள்).

அருட்பணி அ.ஸ்ரீபன் (மூல ஆசிரியர்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்).  யாழ்ப்பாணம்: முரண்பாட்டுக் கற்கைநெறி மன்றம், இலங்கைத் திருச்சபை, 1வது பதிப்பு, வைகாசி 2010. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி). xiv, 124 பக்கம், தகடு,