12546 – கன்னித் தமிழ் வாசகம் இரண்டாம் புத்தகம்: 7ம் வகுப்பு.

வ.கி.இம்மானுவேல். கொழும்பு: வ.கி.இம்மானுவேல், 3வது பதிப்பு, 1963, 1வது பதிப்பு, டிசம்பர் 1957. (அச்சக விபரம் தரப்படவில்லை).

132 பக்கம், விலை: ரூபா 2.15, அளவு: 19.5×14.5 சமீ.

இந்நூல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கேற்ற பாடங்களை 26 அத்தியாயங்களில் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் பின்னரும் இலக்கண அறிவு, மொழித் தேர்ச்சி, கட்டுரைத் திறன், ஆகியவற்றிற் கிசைந்த பயிற்சி வினாக்கள் அப்பியாசங்கள் முதலியன ஏற்ற முறையில் சேர்க்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் காலையும் மாலையும் கடவுளைத் தொழுவோம் (செய்யுளும் விளக்கமும்), நமது மொழி (உரைநடை), இயற்கையும் வாழ்க்கையும் (பாவும் பயனும்), முயற்சியின் உயர்ச்சி (கதை), நறுந்தொகை (செய்யுட் பகுதி), உடல்நலப் பழக்கவழக்கங்கள் (வசனம்), அற்ப அறிவு ஆபத்திற்கிடம் (செய்யுளும் விளக்கமும்), இராமாயணம் (இராமாயண சாரம்), கவியரசர் கம்பர் (கம்பர் வரலாறு), கற்றோர் உயர்வும் கல்லாதார் இழிவும் (செய்யுளும் பொழிப்பும்), கடித வகைகள், சுதந்திர தாகம் (கதை), தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் (கட்டுரையும் செய்யுளும்). அழையாது நுழையும் விருந்தினர், நாரை கொண்டு சென்ற தூது (செய்யுளும் நயமும்), செய்தித்தாளின் பயன் (உரையாடல்), தமிழும் சுவையும், பண்டைத்தமிழர் வாணிபம், திருக்குறள் இன்பம் (செய்யுளும் கருத்துரையும்), பாரியின் பறம்பு நாடு, கடமை வீரம், பொருளின் அவசியம் (செய்யுள்-பொழிப்பு), வெனிசு நகர வாணிபன் (கதை), நெஞ்சில் விளைந்த நஞ்சு, அமைதிக்கு உழைத்த ஒளவையார் (நாடகம்), செய்யுள் வகை (பாடங்களுடன் சேர்த்து மனனஞ் செய்யக்கூடிய பாக்கள்) ஆகிய தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27270).

ஏனைய பதிவுகள்

Zero Betting Gambling enterprises

Content Zero Betting 100 percent free Revolves: A different Point in time Of Casino Bonuses – super jackpot party slot machine A chance for Real

Top 25+ Vortragen Automatenspiele Online

Content Slot Choco Reels: Sie können keineswegs ausfindig machen, was Eltern abgrasen? Bei keramiken sind 3 Top Casinos Was bedeutet unser Auszahlungsquote in Erreichbar Spielautomaten?

10281 மகாஜனன் நூற்றாண்டு சிறப்பு மலர் 2010.

திருமதி ரேணுகாதேவி கேசவன், செ.சத்தியநாராயணன் (மலராசிரியர்கள்). தெல்லிப்பழை: மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, 2010. (கோண்டாவில்: அன்ரா பிரிண்டேர்ஸ், கே.கே.எஸ். வீதி). xxxxi, (8), 358 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: