12549 – செந்தமிழ்ப் பயிற்சி (வாசிப்பு நூல் ): ஐந்தாம் வகுப்புகளுகுரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 2வது பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(4), 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.50, அளவு: 21×14 சமீ.

இவ்வாசகத் தொடர் சிறுவர்களிடையே தமிழின் பெருமையை உணரச்செய்யவும், வாசிப்பின்பால் நாட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் இடையிடையே பாடல்களும் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. மழை வளம், மிருகங்களினது தலைகள், இலங்கையும் இராமாயணக் கதையும், வள்ளுவர் பொன்மொழிகள், வசந்தம், தமிழர் போற்றிய மலரும் மாலையும், பாரதியாரும் பாப்பாவும், கடற் பிரயாண வரலாறு, நமது நாடும் நாமும், பறவைகளினது அலகுகள், பொங்கல் விழா, குருவி கொஞ்சம் நில், நுட்பமான தீர்ப்பு, படை எழுச்சி, மானம் காத்த மன்னவன், ஆறு சொன்ன கதை, இசை இன்பம், செய்திகளை எவ்வாறு அறிகிறோம், பிறந்தநாள் விழா, கதறும் கடல், பண்பில் உயர்ந்த பரஞசோதி, பொன். அருணாசலம், அப்துல்லாவின் வெள்ளைக் கழுதை, வீரத்துறவி விவேகானந்தர், நலந்தரும் நன்மொழிகள்ஆகிய 25 ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24542).

ஏனைய பதிவுகள்

Online Spielautomaten Spielbank

Content Angeschlossen Slots In Land der dichter und denker Jackpots Faqs Hinter Casino Via Mindesteinzahlung 1 Eur Casino-Spiele man sagt, sie seien von jenem Streben

14451 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: நியுற்றனின் இயக்க விதிகள்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). ix, 34