12553 – தமிழ் ஆண்டு 8.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1985. (கொழும்பு: திசர அச்சகம், 135, துட்டுகமுனு வீதி, தெகிவளை).

viii, 204 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

முதற்பாடம் இந்நூற் பொருளைத் திரட்டிக் கூறும் முன்னுரையாக அமைகின்றது. மொத்தம் 23 உரைப் பாடங்களும் 7 செய்யுட்பாடங்களும் இந்நூலில் அமைந்துள்ளன. இவை மனித இனத்தின் முன்னேற்றம், காணாமற்போன குழந்தை, விளையாட்டுக்கள், கண்ணன் என் சேவகன், தேர் திரும்பியது, மணிமேகலை, நபிநாயக மான்மிய மஞ்சரி, ஈழத்து நாட்டுப் பாடல்கள், மார்க்கோ போலோ கண்ட ஈழமும் தமிழகமும், அனுமான் கண்ட இலங்கை, கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, நளவெண்பா, ஞானசவுந்தரி, கலீபா உமரின் வாழ்விலே, பண்டார வன்னியன், உழவுத் தொழில், திருப்பணி தொடங்கியது, செஞ்சோற்றுக் கடன், நிக்கலஸ் கொப்பனிக்கஸ், தனிப்பாடல், அறிஞர் சித்திலெவ்வை, சக்தி பிறக்கிறது, குடிமக்கள் காப்பியம், கூட்டுறவு இயக்கம், கசாவத்தை ஆலிம் புலவர், திருக்குறள், கல்வி, பல்துறை மேதை அல் புரூனி, பழமொழிகள் ஆகிய 29 பாடங்களாக இவை தரப்பட்டுள்ளன. தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளராக வே.வல்லிபுரம் அவர்களும், பதிப்பாசிரியராக இ.விசாகலிங்கம் அவர்களும் பணியாற்றியுள்ளனர். நூலாக்கக் குழுவில் செ.வேலாயுதபிள்ளை, இ.விசாகலிங்கம், முத்தார் ஏ.முஹம்மது, இராசேஸ்வரி செல்வரத்தினம், கிருஷ்ணகுமாரி நடராசா, யு.ர்.ஆ. யூசுப், திலகவதி விவேகானந்தன், என்.பாலச்சந்திரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24991).

ஏனைய பதிவுகள்