12554 – தமிழ் ஆண்டு 9.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: திசர அச்சகம், 135, தட்டுகமுனு வீதி, தெகிவளை).

viii, 208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மனத்தின் விந்தை (வாசிப்பும் விளக்கமும், மொழி அறிவு-மொழியின் தோற்றமும் பயன்பாடும்), வாழ்க்கையின் மூன்று படிகள் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுஎழுத்தியல்), பறவைகளின் இசைவாக்கம் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுபதவியல்), பழமை என்ற விளக்கு (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-புணரியல் 1), நாடகம் தோன்றிய வரலாறு (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-புணரியல் 2), மண்டூரில் தமிழ் என்றால் திருச்செந்தூர்ப் புராணம் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-சொல்லியல்), இசைக் கருவிகள் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுபெயரியல்), நம் பண்டைய நீதி நூலாசிரியர் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுவினையியல்), சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-தொடர் மொழியியல்) ஆகிய ஒன்பது பாடங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17671).

ஏனைய பதிவுகள்