தமிழவேள் (இயற்பெயர் க.இ.க.கந்தசாமி). கொழும்பு 12: குமரன் புத்தகசாலை, 201, டாம் வீதி, 2வது பதிப்பு, டிசம்பர் 1993, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (சென்னை: நிறைமொழி அச்சகம்).
(8), 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
இந்நூலில் அலகுகள் ஒவ்வொன்றிலும் அருஞ்சொற்கள், சொற்றொடர்கள், செய்யுட் பொருள்கள், சொற்புணர்ப்பு, இலக்கண-எழுத்தாக்கங்களின் விளக்கங்கள், இலக்கிய இலக்கண எழுத்தாக்கப் பயிற்சி விடைகள், பயன்தரு குறிப்புகள் என்பன இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பெற்றுள்ளது. மனத்தின் விந்தை (மொழிஅறிவு), வாழ்க்கையின் மூன்று படிகள் (எழுத்துகள்), பறவைகளின் இசைவாக்கம் (பதங்கள்), பழமை என்ற விளக்கு (சந்தி விதிகள்), நாடகம் தோன்றிய வரலாறு (மொழிப்பயிற்சி), மண்டூரில் தமிழ் என்றால் திருச்செந்தூர்ப் புராணம் (சொற்கள்), இசைக் கருவிகள் (பெயர்ச்சொற்கள்). நம் பண்டைய நீதி நூலாசிரியர் (வினைச் சொற்கள்), சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும் (தொடர் மொழிகள்), கட்டுரைப் பயிற்சிகள் ஆகிய பத்து அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.