இ.விசாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: திசர அச்சகம், 135, துட்டுகமுனு வீதி, தெகிவளை).
vii, 206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
நூலாக்கக் குழுவில் செ.வேலாயுதபிள்ளை, சிரோன்மணி இராசரத்தினம், புஷ்பா சிவகுமாரன், முக்தார் ஏ.முஹம்மது, த.கனகரத்தினம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழகமும் நிலமும், செல்வம், எது தமிழ் இலக்கியம், பழந்தமிழர் கலைகள், தொல்காப்பியரும் மொழி வளர்ச்சியும், ஊருடன் கூடிவாழ், பௌத்தரும் தமிழும், தமிழ் அடிச்சொல் இயல்பு, சிவகாமி சரிதை ஆகிய ஒன்பது பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன இவை ஒவ்வொன்றுக்குமான விளக்கப்பயிற்சி, இலக்கணம் எழுத்தாக்கம் ஆகிய மூன்று வகையிலுமான பாடவிளக்கம் அவ்வப் பாடத்துடன் அளிக்கப்பட்டுள்ளன. இலக்கணப் பயிற்சி களில், வாக்கியத்தின் இயல்பு, வாக்கிய வகைகள், வாக்கியக் கூறுகள், தொகைநிலை வாக்கியங்கள், வாக்கியத்தின் அகத் தொடர்புகள், வாக்கிய வழுக்களும் வழாநிலைகளும் வழுவமைதிகளும், வாக்கியங்களை அணிபெற அமைத்தல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எழுத்தாக்கப் பயிற்சிகளில் பந்தி எழுதுதல், கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், அறிக்கை எழுதுதல், சுருக்கம் எழுதுதல், நடைமாற்றி எழுதுதல், உரைநடை வகைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27471).