12558 – தமிழ் எழுத்து பேச்சுப் பயிற்சி.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே. யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, இணைவெளியீடு, தேசிய ஒருமைப்பாட்டுச் செயற்றிட்டப் பணியகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு: மாரியோ அச்சகம்).

X, 62 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ., ISDN: 955-95655-6-7.

தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு எழுத்துத் தமிழ் மொழியைப் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் மெய்யெழுத்துக்களை எழுதும் முறையையும் அவற்றிற்கான ஒலிகளையும், இரண்டாவது பிரிவில் உயிர் எழுத்துக்களையும் அவற்றின் ஒலி வேறுபாடுகளையும், மூன்றாவது பிரிவில் உயிர் மெய் எழுத்துக்களையும், நான்காவது பிரிவில் மெய்யெழுத்துக்களின் ஒலி மாற்றங்களையும் ஐந்தாவது பிரிவில் உரையாடல்களையும் பயிற்சிகளையும் ஆசிரியர் வழங்கியுள்ளார். ஒவ்வொரு உரையாடலும் பேச்சுத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் காட்டப்பட்டுள்ளது. சொற்கள் தமிழிலும் அதைத் தொடர்ந்து அதன் உச்சரிப்பு ஒலியியல் எழுத்துக்களிலும் அதன்பின் சிங்கள எழுத்திலும் இறுதியாக கருத்துக்கள் சிங்கள மொழியிலும் தரப்பட்டுள்ளன. எஸ்.ஜே.யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21156).

ஏனைய பதிவுகள்

kasyno internetowe opinie forum

Mines game demo 3 mines game Kasyno internetowe opinie forum Stake Mines: Stake.com offers a visually appealing Mines game that is known for its smooth