12561 – தமிழ் மலர்: மூன்றாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xv, 205 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1.95, அளவு: 20.5×16.5 சமீ.

முதலாம் பருவத்துக்குரிய பாடங்களாக நமது நாடு, சுப்பிரமணிய பாரதியார், சிங்கமும் தேனீயும், ஆபிரகாம் இலிங்கன், காகம், எனது புகைவண்டிப் பிரயாணம், இராமனும் மந்திரவாதியும், ஒழுக்கம், வழித்துணை, உலக நீதி ஆகியவையும், இரண்டாம் பருவத்துக்குரிய பாடங்களாக சமயோசித புத்தி (நாடகம்), மூன்று மீன்கள், அரிச்சந்திரன், பருத்தி, சேர்.பொன் இராமநாதன், ஆறு, வாழை, வண்ணத்துப்பூச்சி, தனக்கு வந்தால் தெரியும், புலியும் பூனையும், புத்தி தெளிந்தான், பிச்சை புகினும் கற்கை நன்றே, வெற்றி வேற்கை ஆகிய பாடங்களும், மூன்றாம் பருவத்துக்குரிய பாடங்களாக விபுலாநந்தர், அதிக ஆசை அதிக நட்டம், மயில், நன்றி மறவேல், கடற்கரைக் காட்சி, தபால் சொன்ன கதை, அலிம் அசனா லெப்பைப் புலவர், கேலி செய்யாதீர், யப்பானும் யப்பானியரும், வாக்குண்டாம் ஆகிய பாடங்களுமாக மொத்தம் 33 பாடங்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல்கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27475).

ஏனைய பதிவுகள்

14382 கல்விப்பொதுத் தராதரப் பத்திரம் (உயர்தரம்) ஆண்டு 12-13: வரலாறு பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: சமூக விஞ்ஞானத்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: NIE Press). x, 56 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 20×29.5 சமீ. 2017ஆம்

14477 மரக்கறிச் செய்கை.

கே.என். மான்கோட்டே (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). பேராதனை: பணிப்பாளர், விரிவாக்க பயிற்சிப் பிரிவு, த.பெட்டி எண். 18, விவசாயத் திணைக்களம், விவசாய கால்நடை அமைச்சு, 1வது பதிப்பு, 2003. (பேராதனை: விவசாயத் திணைக்கள

14474 பரராசசேகர நயனவிதி (மூலமும் உரையும்).

சே.சிவசண்முகராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, வைகாசி 2012. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செற் பிறின்ரேர்ஸ், பலாலி வீதி). vi, 14 பக்கம், விலை: