நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
(4), viii, 295 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.80, அளவு: 21×14 சமீ.
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான மொழிப்பயிற்சிகள் இங்கே சிறு பாடப் பிரிப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்து, பாண்டவரும் கௌரவரும், எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள், பொறாமையின் கேடு (கதை), நதி கடலை அடைதல், காந்தியடிகளின் கல்விக் கொள்கை, மூவகைப் பயனிலைகள், கல்வியும் விளையாட்டும், குறக்குடியின் இயல்பு, சூதாட்டம், தொழிற்பெயர், நீர் கண்ட பயங்கரக் கனவு, மனுநீதிகண்ட சோழன், தாமோதரம்பிள்ளை, தொழிற்பெயரும் பண்புப் பெயரும், நீர் அறிந்த பெரியார், வனவாசமும் அஞ்ஞாதவாசமும், ஈரொற்றுக்கள், அறியாது செய்த தீங்கும் அதன் பரிகாரமும் (கற்பனை), அடக்கமுடைமை, ஆற்றங்கரைக் காட்சி, ஆகுபெயர், காலைக்காட்சி, தெரிந்து செயல்வகை, கண்ணன் தூது, இடுகுறிப்பெயர் காரணப்பெயர், உரையாடல் (பாரத கதாபாத்திரங்கள்), பூவையும் முயலும் உயிரிழந்த கதை, குகனும் பரதனும் (நாடகம்), தொழிற்பெயர்-வினைச்சொல், போரும் சமாதானமும், பாரதப் போர், பூவையும் முயலும் (கதை), யானைப் பரிசு, சேர். பொன்னம்பலம் இராமநாதன், நேர்க்கூற்று-பிறன்கூற்று, கதையை முடித்தல், நீதி வெண்பா, கோவூர்க் கிழார் (நாடகம்), உரையாடல் (கல்லூரி மாணவிகள்), யூலியர் சீசர், கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையரும், நட்பு, தமயந்தி புலம்பல், தொழிலாளர், மூவிடப் பெயர், வினைமுற்றுக்கள், மதுவிலக்கு, ஆலமரமொன்று கூறிய கதை, வினைமுற்று, ஓர் ஆறு தன்கதை கூறுதல், திரிகடுகம், தென்னாட்டில் என் விடுமுறை நாள், ஏவல் வினைமுற்று, விடுமுறையைக் கழித்த விதம் (கடிதம்), மருத நிலம், சூரப்பனும் அரத்தனும், இடைநிலைகள், விகுதிகள், செய்தித்தாள்கள், குசேலன் கண்ணபிரானைக் காணல், வினை முற்றுக்கள், தந்தை தாய் பேண், கூத்தரும் குலோத்துங்கனும், தந்தை தாய்ப் பேண் (கதையாக்கம்), நபி அவதாரம், நெல்லிக்கனி, பெயரெச்சம்-வினையெச்சம், சுகவாழ்வு, விதுரன் தூது, கல்வி, வியங்கோள் வினைமுற்று, நூல்நிலையம், இயற்கை எழில் நிறைந்த சிகிரிய, முதனிலை, மலைக்காட்சி, சாணக்கிய நீதிவெண்பா, குரவைக்கூத்து, இறுதி நிலை, நாம் கொண்டாடும் விழாக்கள் (கடிதம்), கந்துகவரி, குமணன், மோனை எதுகை மீட்டற் பயிற்சி, கிராமச் சந்தைகள், தாளாண்மை-வாக்கியம்-தொடர், நிலைமொழி வருமொழி, பிச்சைக்காரன் தன் கதை கூறுதல், கண்ணுவரும் சகுந்தலையும், சுவாமி ஞானப் பிரகாசர், இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி, விபுலாநந்தர், கடமை, ஒலிம்பிக் விளையாட்டுக்கள், உடம்படுமெய், மாணவர் கடமை, ஆகிய பாடங்கள் இந் நூலில் 26 பகுதிகளாக இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27472).