12565 – தமிழ் மொழி விளக்கம் இரண்டு பகுதிகள் அடங்கியது.

க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், உதவி அதிபர், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, சித்தன்கேணி, 3வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, பங்குனி 1953, 2வது திருத்திய பதிப்பு, 1954. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

xii, 189 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×13.5 சமீ.

தமிழ் மரபுக்கேற்ப இலக்கண வழுவின்றித் தமிழை எழுதவும் தற்காலத் தமிழ் மொழி வளனுக்கேற்பப் பொதுத் தேர்வுகளில் காணப்படும் சொற்கள், மரபுச் சொற்றொடர்கள், விளக்கப் பயிற்சி, கடிதம் வரைதல், கட்டுரை வரைதல், சுருக்கி எழுதல், உரைநடை ஆக்கம் செய்தல், செய்யுள் நயம் கூறல், மொழி பெயர்த்தல் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்குத் தகுந்த முறையில் விடை எழுதவும் உதவுவதற்காக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்பகுதியில் சொற் பயிற்சி, சொற்றொடர்ப் பயிற்சி, வாக்கியப் பயிற்சி ஆகிய பாடங்களும் இரண்டாம் பகுதியில் விளக்கப் பயிற்சிகள், கடிதம் வரைதல், கட்டுரை வரைதல், சுருக்கி எழுதுதல், உரைநடை ஆக்கம் செய்தல், செய்யுள் நயம் கூறல், மொழி பெயர்ப்பு ஆகிய பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. து.ளு.ஊ, பு.ஊ.நு. வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகளுக்கும் ஏற்ற புதிய தமிழ்மொழிப் பயிற்சி இதுவாகும். டாக்டர் மு.வரதராசனார், சி.சுவாமிநாதன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33120).

ஏனைய பதிவுகள்