ஆறுமுக நாவலர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ., ISDN: 978-955-659-534-5.
யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுக நாவலர் ஆற்றிய பணிகளில் கல்விப்பணி குறிப்பிடத்தக்கது ஆகும். சிறுவர்களுக்கு எளிய முறையில் தமிழ் கற்பிப்பதற்காக அவர் பாலபாடம் இயற்றியமை அதன் ஒரு பகுதியாக அமைகின்றது. ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்ட பாலபாடம் முதல் புத்தகம் 1850ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த முதல் புத்தகம் தமிழ் நெடுங்கணக்கு, சொற்கள், சொற்றொடர்கள், பிராதக்காலப் பிரார்த்தனம் (விடியற்கால பிரார்த்தனை), சாயங்காலப் பிரார்த்தனம் என்னும் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.