12570 – பேச்சுத் தமிழுக்கு அறிமுகம்.

எஸ்.ஜே.யோகராஜா. கொழும்பு 15: எஸ்.ஜே. யோகராஜா, 65ஃ322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

xvi, 146 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 25×17 சமீ., ஐளுடீN: 978-955-97763-5-2.

தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு பேச்சுத் தமிழ் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் 15 பாடங்களாக வகுத்து உருவாக்கப்பட்டுள்ளது. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், உச்சரிப்பு வேறுபாடுகள் அ,ஆ,இ,ஈ,எ,ஏ,உ, உச்சரிப்பு வேறுபாடுகள் க,ச,ட, உச்சரிப்பு வேறுபாடுகள் ப,ற,த, சாப்பாட்டுக் கடையில் உரையாடல், இலக்கணம் (வேணும்- வேண்டாம், இருக்கு, இல்லை, சந்தி, ஆ-கேள்வி உருபு, வினையெச்சம், உம், உம், ங்கோ(ங்க)..உங்கோ(உங்க), பெயரெச்சம், இலக்கம் 1-10, காரியாலயத்தில் நடந்த உரையாடல், தொலைபேசி உரையாடல், நிகழ்காலம் எதிர்காலத்தில் பயன்படுதல், எதிர்காலம், இறந்தகாலப் பெயரெச்சம், இறந்தகால அழுத்தமான வினைச்சொற்கள், முடிவற்ற எச்சத்துடன் இல்லை சேர்வது, வீதிச் சோதனைச் சாவடியில் நடந்த உரையாடல், கடவுச்சீட்டுக் காரியாலயத்தில் நடந்த உரையாடல், புடவைக்கடையில் நடந்த உரையாடல், இருவருக்கிடையில் நடந்த உரையாடல், மரக்கறிக் கடையில் நடந்த உரையாடல், தபாற்கந்தோரில் நடந்த உரையாடல், நேர்முகப் பரீட்சை எனப் பல்வேறு தலைப்புகளிலும் உப தலைப்புகளிலும் பேச்சுத் தமிழ்மொழி புகட்டப்பட்டுள்ளது. எஸ்.ஜே.யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48367).

ஏனைய பதிவுகள்

Nuts Dollars Slot Remark

Posts When to Switch to Cash Playing? Is actually Online slots Rigged? Piggy Bankin Lock It Connect Grand Jackpot Winnings 130k The design Idea Of