அ.ஜே.ஷாவ்றர். கொழும்பு: அ.ஜே.ஷாவ்றர், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், பரி.தோமஸ் கலாசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 1933. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xx, 163 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ.
‘திரு அவதார மாலை” என்னும் காப்பியத்தின் ஆக்கியோனான அமரர் சி.பீற்றர் அடால்பஸ் புலவர் அவர்களின் புத்திரனும் பரி.தோமஸ் கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமான யு.து.ளுஉhயககவநச அவர்கள் எழுதிய தமிழ்ப் பாடநூல் இது. மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதற்பாகத்தில் மழையும் மின்னலும், வயிற்றுவலி, மங்களம், காற்றாடி, குழந்தையும் கூட்டுப் பிராணிகளும், செல்லப்பிள்ளை, கவனமில்லாத பிள்ளை, நல்ல பிள்ளை சொல்வது, மின்னு மின்னு வெள்ளியே, விடாமுயற்சி, ஓர் விடுகதை, மூளியுங் காளியும் (கும்மி), கமக்காரன், சிப்பியின் இரகசியம், விடுமுறை நாட்கள், வேலையின் பின் விளையாட்டு, உலோபி, வேலையும் விளையாட்டும், உடம்புப் பயிற்சி, கைவிரல்கள் என இன்னோரன்ன 54 பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பாகத்தில் மேலோரைக் கனம் பண்ணல், விருது விரும்பிய சித்திரர், கிளிப்பிள்ளையின் கதை என இன்னோரன்ன 13 பாடங்கள் உள்ளன. இறுதியாக உள்ள மூன்றாவது பாகத்தில் சம்சோன் வெண்பா இடம்பெற்றுள்ளது. இவ்வெண்பா, பாயிரம், சென்ன காண்டம், மணம்புரி காண்டம், வினைசூழ் காண்டம், வாழி ஆகிய ஐந்து பிரிவுகளில் காணப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25126).