12574 – வளருந் தமிழ்: ஆறாம் வகுப்புக்குரியது.

க.யோ.ஆசிநாத பண்டிதர். யாழ்ப்பாணம்: யாழ். தமிழ் இலக்கியக் கழக வெளியீடு, 2வது பதிப்பு, 1959, 1வது பதிப்பு, 1957. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

vi, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூலில் ஆறாம் வகுப்பிற்குரிய தமிழ்மொழிப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. வாக்கியம் (வாக்கியத்தின் பொது அமைப்புஃவாக்கிய வகைகள்), வாக்கிய உறுப்புக்கள் (எழுவாய்ஃபயனிலைஃசெயப்படுபொருள்), சொற்கள் (பெயர்ச்சொல்ஃ வினைச்சொல்ஃ இடைச்சொல்ஃஉரிச்சொல்), எழுத்து (எழுத்துக்களின் வகைஃ எழுத்திலக்கணம்ஃபொருள் வேற்றுமைஃவேறுபாட்டுச் சொற்கள்), புணர்ச்சி (நிலைமொழிஃவருமொழிஃ இன்றியமையாப் புணர்ச்சிகள்), மொழிப்பயிற்சி (அடைமொழி, வாக்கியப் பொருத்தம், இடம்விட்டெழுதுதல், சேர்த்தெழுதுதல், சொற்பொருத்தம்), நிறுத்தற் குறிகள் (குறியீடுகளின் வகைகள்), உரை நடைகட்டுரை (கட்டுரை வகைகள்ஃ கதை எழுதுதல், வரலாறு எழுதுதல், வர்ணித்து எழுதுதல், சொற்றொடர்களை விளக்கி எழுதுதல், நிகழ்ச்சிகளை வரைதல், விழா நிகழ்ச்சிகள், பின்குறிப்பின்றி கட்டுரை வரைதல், கடிதக் கட்டுரை, உரையாடற் கட்டுரை) ஆகிய தமிழ் மொழிப்பாடங்கள் இதில் அடங்கியுள்ளன. நூலாசிரியர் க.யோ.ஆசிநாத பண்டிதர் கிளிநொச்சி, புனித தெரேசா மகாவித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21341).

ஏனைய பதிவுகள்

14699 தாய்மை: தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்.

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2019. (மாவனல்ல: எம்.ஜே.எம். அச்சகம், 119, பிரதான வீதி). xi, 108 பக்கம், விலை: ரூபா

12976 – வன்னியில் தமிழரசு: சிம்மக்குரலோன் செல்லத்ததம்பு அரச பேரவையில் ஆற்றிய உரைகள்.

சேவியர் மார்க் செல்லத்தம்பு (மூலம்), த.ம.பீற்றர் பொன்கலன்ட் (தொகுப்பாசிரியர்). நெடுங்கேணி: த.ம.பீற்றர் பொன்கலன்ட், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1973. (கொழும்பு: அருளொளி அச்சகம்). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 13.5