12578 – ஆரம்ப விஞ்ஞானம்: ஆண்டு 5.

கு.வி. அச்சகத்தினர். யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன்).


(4) 108 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 80., அளவு: 26.5×20 சமீ.


1997ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள தேசிய கல்வி நிறுவகம்,
ஆரம்பக் கல்வித்துறை வெளியிட்ட ஆண்டு 5 விஞ்ஞானத்திற்கான விரிவான பாடத்திட்டம் முழுவதையும் அடிப்படையாகக்கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பன்னிரு பாடங்களாக வகுக்கப்பட்டுள்ள இந்நூலின் உள்ளடக்கத்தில் எமது சுற்றாடல், மண்ணின் பண்புகள், எமக்கு அவசியமான நீர், பூண்டுகளும் மரஞ்செடி கொடிகளும், பிராணிகளின் தகவல்கள், காந்தம்,
எம்மைச் சூழவுள்ள வளி, நாம் பயன்படுத்தும் மின்சாரம், நாம் உணரும் சூடு, பார்ப்பதற்கு உதவும் வெளிச்சம், எமது இயந்திர சாதனங்கள், நாம் செவிமடுக்கும் சத்தம் ஆகிய பாடங்கள் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55033).

ஏனைய பதிவுகள்

14836 கண்ணகி கற்பு அல்லது வினைச் சிலம்பால் விளைந்த கதை.

தொல்புரக்கிழார் (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: நா.சிவபாதசுந்தரன், தமிழ் நிலை, தொல்புரம், 1வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி). iv, (8), 56 பக்கம், விலை: 75 சதம், அளவு:

12102 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கடல்: 24ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்.

கே.மோகன்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு: மாஸ்க் அட்வர்டைசிங் அன்ட்

14005 கணினி வழிகாட்டி: 5.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, மே 2003. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98004-3-4.

13A05 – கர்னாடக சங்கீதம்: தரம் 10: வழிகாட்டற் குறிப்புகள்.

கிருஷ்ணவேணி மயில்வாகனம். யாழ்ப்பாணம்: கீதவாஹினி இசைக் கல்லூரி, கொழும்புத்துறை, 3வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை பதிப்பகம்). ix, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

14767 சுடர் விளக்கு (நாவல்).

பா.பாலேஸ்வரி (இயற்பெயர்: செல்வி பாலேஸ்வரி பாலசுப்பிரமணியம்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 471, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1966. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம், 25, முனைத்தெரு). 154 பக்கம், சித்திரங்கள்,