இ.குணநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: திசர அச்சகம், 135, தட்டுகமுனு வீதி, தெகிவளை).
vii, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
மண், மண்வளம், சூரியனும் சூரிய சக்தியும், ஞாயிற்றுத் தொகுதி, வளியமுக்கம், வளிமண்டலத்திலுள்ள வாயுக்கள் ஆகிய ஆறு தலைப்புகளில் ஏழாம் வகுப்புக்கான ஆரம்ப விஞ்ஞான பாடம் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலின் மூல நூலாக்கக் குழுவில் திருமதி நாளினி எதிரிசிங்க, நிமால் இரத்நாயக்க, ளு.ஆ.விஜேரத்ன, உபாலி சல்பதொறு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நூலின் தமிழாக்கக் குழுவில் இ.குணநாதன், திருமதி. க.சிவபாதசுந்தரம், த.வாகீசமூர்த்தி ஆகியோர் பணி யாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 24990).