12581 – நவீன விஞ்ஞானம்(முழு அலகுகளும்): ஆண்டு 8.

ஐ.ஜெகநாதன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1986. (அச்சுவேலி: ராஜா அச்சகம்).

(4), 137 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 19.00, அளவு: 21×14 சமீ.

கல்வித் திணைக்களத்தின் விஞ்ஞான ஆலோசகர் ஐ.ஜெகநாதன் அவர்கள் எழுதிய நூல் இது. 1986ஆம் ஆண்டு முதல் அமுலிலுள்ள புதிய பாடத்திட்டத்திற் கேற்ப முழு ஆண்டுக்குமுரிய எல்லாப் பகுதிகளையும் அதாவது அலகு 1 முதல் அலகு 11 வரை மனிதனும் சூழலும், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் வானிலையும், வான், ஒளி, உணவு, நீர், சடப்பொருள், மின்னும் காந்தமும், வெப்பம், விசையும் விசையை அளத்தலும், அடர்த்தி ஆகிய பாடங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25718).

ஏனைய பதிவுகள்

12948 – இலங்கை முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்கள்.

நீர்வை பொன்னையன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இல.18/6/1, கொலிங்வுட் பிளேஸ், 2வது பதிப்பு, ஜனவரி 2017, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய

12006 – ஒரு நூலின் மகத்துவம்: தரமான நூலொன்றை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகள்.

புஷ்பகுமார விதானகே (சிங்கள மூலம்), லறீனா அப்துல் ஹக் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,