12584 – அட்சரகணிதம்-1.

க.அருளானந்தம், க.கமலநாதன், பொ.மகேஸ்வரன், சு. வே.மகேந்திரன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: STP Computer World).

(8), 187 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ.

நான்கு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல் காரணிப் படுத்தல் (தொகுப்பு முறை வகுத்தல், மீதித் தேற்றம், மீள் காரணிகள், பல்லுறுப்பிச் சார்புகளைக் காரணிப்படுத்தல்), இருபடிச் சமன்பாடுகள்-சார்புகள் (இருபடிச் சமன்பாடுகளும் தீர்வுகளும், கூலங்களின் தன்மை, இருபடிச் சார்புகள், விகிதமுறு சார்புகள்), தொடர் (தொடரின் கூட்டுத்தொகை, தொடரின் கூட்டுத்தொகை கண்டுபிடிப்பதற் குரிய வித்தியாச முறை, தொடரின் கூட்டுத்தொகை காண்பதற்கான விசேட முறைகள்), எண்ணும் முறைகள் (வரிசை மாற்றம், சேர்மானம், எல்லாம் வேறுபடாத பொருள்களின் சேர்மானமும் வரிசைமாற்றமும்) ஆகிய தலைப்புகளில் இப்பாடப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் பயிற்சிகளுக்கான விடைகள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் கணிதம் வெளியீட்டுத் தொடரில் 1வது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37444).

ஏனைய பதிவுகள்

14100 வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: ஆலய பரிபாலன சபை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருத்தலம், வெல்லாவெளி, 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி). 150 பக்கம்,

Demo & Spielsaal Freispiele 2024

Content Mexico wins Spielautomat: Spielautomaten tricks Sizzling Hot: Rechtliche Aspekte as part of Lizenzen as person of deutschen seriösen Erreichbar Casinos Book Of Ra Gewinntabelle