12586 – கணிதம் ஆண்டு 5-பகுதி 2.

M.P.M.M.ஷிப்லி (தமிழாக்கம்), ந.வாகீசமூர்த்தி (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தபால்பெட்டி எண் 520, புதிய செயலகம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, 1987. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).

x, பக்கம் 189-413, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

கல்வி அமைச்சின் 1985ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தின்படி இந்நூல் தயாரிக்கப்பட்டது. எண்களை அறிதல், எண்களை ஒப்பிடுதலும் வரிசைப்படுத்தலும், கணிதச் செய்கை (கூட்டல், கழித்தல்), எண்ணுதலும் கோலங்களும், கணிதச் செய்கை (பெருக்கல் பிரித்தல்), பணம், அலகு முறை, பிரச்சினைகளைத் தீர்த்தல், வடிவமும் சமச்சீரும், சாதாரண பின்னம், தசம பின்னம், அளத்தல் (நீளமும் சுற்றளவும், காலம்), வரைபுகள், எண்களை அறிதல் (வாசித்தல், எழுதுதல், இடப்பெறுமானம்), திசைகளும் பருமட்டான படங்களும் ஆகிய பாடப்பரப்பில் படிமுறைகள் 44முதல் 90 வரை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பக்கம் 396- 413வரை பலவினப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11195).

ஏனைய பதிவுகள்