கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 3வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 1999. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ் அச்சகம், 712, புளுமெண்டால் வீதி).
viii, 262 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
இலங்கைக் கல்வித்துறையின் தரம் ஆறுக்குரிய பாடவிதானத்தையொட்டி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கணித பாடநூல். இதில் இடப்பெறுமானம், மில்லியன், ஒற்றை எண்களும் இரட்டை எண்களும், மதிப்பீடு, முழு எண்களில் கூட்டல், முழு எண்களில் கழித்தல், எண்கோலங்கள், சேர்த்தி எண்கள், முதன்மை எண்கள், முதன்மைக் காரணிகள், கோட்டின் மீது எண்கள், எண்கோடு, தெரிதல், சமனிலிகள், பின்னங்கள், தசமங்கள், முழு எண்களில் பெருக்கல், முழு எண்களில் வகுத்தல், நீளத்தை அளத்தல், எட்டுத்திசைகள், கூற்றுக்கள், பரப்பளவுகள், நிறை-திரவ அளவீடு, நேரம், நேர்கோட்டுத் தளவுருவம், தரவுகளைச் சேகரித்தல், தரவுகளை வகைக்குறித்தல், வகுபடு தன்மை, சுட்டிகள், விகிதம், வட்டம், தொடர்பு, திண்மம், நிகழ்ச்சியொன்றின் நிகழ்வு ஆகிய 34 பாடங்கள் விளக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40433).