12589 – கணிதம் 10ஆம் ஆண்டு.

M.P.M.M.ஷிப்லி (தமிழாக்கம்), ந.வாகீசமூர்த்தி, திருமதி ம.திருநாவுக்கரசு (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 7வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 13: பசிபிக் அச்சகம், இல. 267, ஆட்டுப்பட்டித் தெரு).

vii, 410 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூலில் தொடைகள், செலாவணி வீதமும் அந்நியநாட்டு நாணயமும், முக்கோணிகளின் ஒருங்கிசையல், ஒருங்கமை சமன்பாடுகள், வலையுரு வரையமும் மீடிறன் பல்கோணியும், இருசமபக்க முக்கோணிகள், சதவீதம், இருபடிக் கோவைகளின் காரணிகள், இணைகரங்கள், எண் அடிகள், வரைபுகள், முக்கோணிகளின் சமமின்மை, பரப்பளவு, அட்சரகணிதக் கோவைகளின் பொ.ம.சி., வெட்டுத்துண்டுத் தேற்றங்கள், வட்டி, மடக்கைகள், இணைகரங்களினதும் முக்கோணிகளினதும் பரப்பளவுகள், அட்சரகணிதப் பின்னங்கள், நிகழ்தகவு, வட்டம் ஒன்றின் நாண்கள், பங்குடைமை வியாபாரப் பங்குகள், இருபடிச் சமன்பாடுகளைத் தீர்த்தல், வட்டம் ஒன்றின் கோணங்கள், இடை, கூட்டல் தொடர், கேத்திரகணித அமைப்புகள், விகிதமும் விகித சமனும், கனவளவு, திரிகோணகணித விகிதங்கள், இருபடிச் சமன்பாடுகள், அளவிடையை ஆக்குதல் ஆகிய பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25362)

ஏனைய பதிவுகள்

Wolf Focus on Keno Enjoy Today

Posts Aruze Betting Go go Claw Cash Take How to Gamble n’… Similar ports The new and more than Popular – Simply click to experience