12590 – கேத்திர கணிதம்: முதற் புத்தகம்.

ச.சிதம்பரப்பிள்ளை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 2வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

viii, 252 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

ஆதார கேத்திர கணிதம், ஆரம்ப கேத்திர கணிதம், முறையான கேத்திர கணிதம் என மூன்று பாகங்களில் விளக்கப்பட்டிருக்கும் கேத்திரகணித பாடநூல் இதுவாகும். கேத்திர கணித விடயங்களை செவ்வனே விளங்கிக்கொள்வதற்கு அடிப்படையான கோணங்களின் தன்மை, சமாந்தர வரைகள், செங்குத்து வரைகள், படுக்கை முதலான அடிப்படைக் கருத்துக்களை இப்பிரிவு வழங்குகின்றது. இலகுவான கேத்திரகணித உண்மைகள் சில செய்கை முறையாக இப்பிரிவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முக்கோணிகளின் சமத்துவம், துவிசமபுய முக்கோணிகள், போன்றவற்றின் பண்புகள் என்பன உதாரணத்துக்குச் சிலவாகும். கேத்திர கணித ரீதியில் விஷயங்களை முறையாக ஆராய்வது மூன்றாம் பாகமாகும். சூத்திரங்களும், உள்ளுறைகளும், சூத்திரங்களைத் தழுவிய ஆக்கங்களும் இப்பாகத்தில் படிமுறையாக விளக்கப்படுத்தப்பட்டுள்ளன. நூலில் ஆங்காங்கே போதியளவு அப்பியாசங்கள் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. விசேஷ மாக மூன்றாம் பாகத்திலே வரும் அப்பியாசங்கள் கணித்தல், வரைதல், நிறுவுதல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14077).

ஏனைய பதிவுகள்

12514 – பாடவிதான முகாமைத்துவமும் ; பாடசாலை ஒழுங்கமைப்பும் (அத்தியாயம் ; 1-6).

ஆசிரிய கல்வி நிறுவகம். மகரகம: ஆசிரிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-டீஇ P.வு. டீ சில்வா மாவத்தை). 138 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12900 – எங்கள் குருநாதன் திருவாசக சுவாமிகள்.

முருக.வே.பரமநாதன் (புனைபெயர்: ஆழ்கடலான்). களுபோவிலை: தெகிவளை திருவாசகம் சுவாமிகள் தொண்டர் சபை, 11/6, ரூபன் பீரிஸ் மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு 13: இலட்சுமி அச்சகம் இணை பதிப்பாளர், வீமாஸ் அச்சகம்).

14899 அருளொளி: ஸ்ரீ கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1896-1996.

மா.கணபதிப்பிள்ளை (செயலாளர்). கொழும்பு 2: அருளொளி நிலையம், 31/21, டோசன் வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 02: நியூ ராஜன் பிரின்ட், இல.25, கியூ லேன்). 50+(10) பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை:

14170 ராமகிருஷ்ண மிஷன் (இலங்கைக் கிளை) நூற்றாண்டு விழா 1897-1997: சிறப்பு மலர் 1998.

மலர்க் குழு. கொழும்பு 6: ராமகிருஷ்ண மிஷன், இல. 40, ராமகிருஷ்ண வீதி, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இச்சிறப்பிதழில்

14233 மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், திருப்பள்ளியெழுச்சி,திருவம்பாவை.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 24 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18.5×12.5 சமீ. சைவ சமயம்