12590 – கேத்திர கணிதம்: முதற் புத்தகம்.

ச.சிதம்பரப்பிள்ளை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 2வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

viii, 252 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

ஆதார கேத்திர கணிதம், ஆரம்ப கேத்திர கணிதம், முறையான கேத்திர கணிதம் என மூன்று பாகங்களில் விளக்கப்பட்டிருக்கும் கேத்திரகணித பாடநூல் இதுவாகும். கேத்திர கணித விடயங்களை செவ்வனே விளங்கிக்கொள்வதற்கு அடிப்படையான கோணங்களின் தன்மை, சமாந்தர வரைகள், செங்குத்து வரைகள், படுக்கை முதலான அடிப்படைக் கருத்துக்களை இப்பிரிவு வழங்குகின்றது. இலகுவான கேத்திரகணித உண்மைகள் சில செய்கை முறையாக இப்பிரிவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முக்கோணிகளின் சமத்துவம், துவிசமபுய முக்கோணிகள், போன்றவற்றின் பண்புகள் என்பன உதாரணத்துக்குச் சிலவாகும். கேத்திர கணித ரீதியில் விஷயங்களை முறையாக ஆராய்வது மூன்றாம் பாகமாகும். சூத்திரங்களும், உள்ளுறைகளும், சூத்திரங்களைத் தழுவிய ஆக்கங்களும் இப்பாகத்தில் படிமுறையாக விளக்கப்படுத்தப்பட்டுள்ளன. நூலில் ஆங்காங்கே போதியளவு அப்பியாசங்கள் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. விசேஷ மாக மூன்றாம் பாகத்திலே வரும் அப்பியாசங்கள் கணித்தல், வரைதல், நிறுவுதல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14077).

ஏனைய பதிவுகள்

Enjoy Free Casino games

Content Large 5 Game Casino slot games Analysis No Totally free Game Initiate To experience Totally free Ports! At this time, any kind of on-line