இ.செந்தில்நாதன். சென்னை: நீலமலர் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (சென்னை 86: சாலை அச்சகம், இல. 11, திருவீதியான் தெரு, கோபாலபுரம்).
(8), 9-100 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: இந்திய ரூபா 10.00, அளவு: 18×12.5 சமீ.
யாழ்ப்பாண வானியல் கழகத் தலைவராக இருந்தவர் வழக்கறிஞரான இந் நூலாசிரியர். பூமி, சந்திரன், சூரியன், கிரகணங்கள், சூரிய குடும்பம், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்ரியூன், பு;ட்டோ, விண்துகள்கள், வால்வெள்ளிகள், விண்கற்கள், நட்சத்திரங்கள், உடுக்கூட்டங்கள், பால்வழி, நெபுலங்கள், கிரகங்களின் உற்பத்தி என்பன பற்றிய பல்வேறு தகவல் களை இலகு நடையில் இந்நூலில் வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19998).